மலையாளப் படத்தில் நடிக்கிறார் விஜய்?

மலையாளத்தில் ரஜினிக்கு அடுத்து ஓரளவு வரவேற்புள்ள நடிகர் விஜய். இவரது சமீபத்திய படங்கள் சில அங்கு 50 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. வசூலும் பரவாயில்லை!சமீபத்தில் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.கருத்தன் என்ற

சகுனியால் பின் வாங்கிய பில்லா 2

வரும் 22ம் தேதி ரிலீஸாகவிருந்த அஜீத் குமாரின் பில்லா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா நடித்துள்ள பில்லா 2 படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பில்லா 2 ஜுன் 22-ல் ரிலீஸ் ஆகுமா? - அதிருப்தியில் தயாரிப்பாளர்!

அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால், படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு. படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 21-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டாலும், இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. அஜீத், பார்வதி ஓமணக் குட்டன், புருனா அப்துல்லா நடித்துள்ள படம் பில்லா 2. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சக்ரி டோலெட்டி இயக்கியுள்ளார்.

பூலோகம் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக த்ரிஷா!

 த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் ‘லேடி பாக்ஸர்' என்று த்ரிஷாவிற்கு பெயர் சூட்டியுள்ளாராம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவே கூறியுள்ளார்.உனக்கும் எனக்கும் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா இணையும் படம் பூலோகம். இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். கதாநாயகி த்ரிசாவிற்கு வலுவான பாத்திரமாம்.

ஹாலிவுட்டில் களமிறங்குகிறேன் - கமல்!

ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், அந்த படத்தை இயக்குகிறேன். அதற்கான வேலைகள் நடக்கின்றன," என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்ஹாஸன். சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விழா நடைபெறுகிறது (ஐஃபா). இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் முன்னோட்டக்

பில்லா 2 போட்டியாக ரிலீஸ்யாகும் சகுனி!

கார்த்தி நடிக்கும் சகுனி படத்துக்கு தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்க்கலாம் எனும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.சமீபத்திய படங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள படம் சகுனி. அஜீத்தின் பில்லா 2வுடன் மோதும் இந்தப் படத்தில் கார்த்தி - பிரனிதா நடித்துள்ளனர்.

கதைக்கும் தலைப்புக்கும் பொருத்தமில்லாத படம் தலைவன் - விஜய்

இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகர் விஜயை வைத்து ஒரு புதுப் படமொன்றை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘தலைவன்’ எனப் பெயரிடப் பட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் பொருத்தம் இல்லை என்று கூறியுள்ள இயக்குனர், விரைவில் ‘தலைவன்’ படத்திற்கு வேறு புதிய தலைப்பை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திக்கு ஜோடியாகும் சமந்தா!

சமந்தாவுக்கு தமிழில் அப்படி ஒரு மவுசு. முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்கள் சமந்தா கால்ஷீட் இருந்தா நல்லாருக்குமே என்று கேட்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்துவிட்டது.இத்தனைக்கும் தமிழில் ஒரு படம் கூட பெரிதாக ஓடவில்லை.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More