ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பு நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்தான் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த அமைப்பினர் நடத்தவுள்ளனர். உண்ணாவிரதத்தில் அவரும் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அன்னா ஹசாரே தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த். டெல்லியில் அவர் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அவருடன் தானும் உண்ணாவிரதம் இருக்க விரும்பியதாகவும், ஆனால் உடல் நலன் காரணமாக இருக்க முடியாமல் போய்விட்டதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி.
ரஜினிகாந்த். ஊழலுக்கு எதிராக தானும் இருப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் தற்போது நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் ஊழலுக்கு எதிரான எந்த சட்ட மசோதாவுக்கும் தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று எங்களிடம் தெளிவுபடுத்தினார்.


12/27/2011 09:39:00 am
Tamilan

Posted in: 
