பில்லா 2-வில் நடித்து வரும் அஜீத், அடுத்து இரு படங்களில் நடிக்கிறார். முதல் படத்தை இயக்குகிறவர் விஷ்ணுவர்தன். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதையடுத்து விஜய் இயக்கத்தில் விஜயா புரொடக்சன் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் தந்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார். இந்தத் தகவலை கலை இயக்குனர் சந்தானம் உறுதி செய்திருக்கிறார்.
இது பற்றி கூறியிருக்கும் அவா, தெய்வத்திருமகள் படத்தில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்தேன். ஆனால் விஜய்யின் அடுத்தப் படமான தாண்டவத்தில் பணிபுரிய முடியவில்லை. வேறு இரண்டு படங்கள் முடிக்க வேண்டியிருப்பதால் தாண்டவம் வாய்ப்பு கைநழுவியது. ஆனால் விஜய் அஜீத்தை வைத்து இயக்கும் படத்தில் கண்டிப்பாக பணிபுரிவேன் என்று தெரிவித்துள்ளார்.


1/05/2012 10:19:00 am
Tamilan

Posted in: 
