கமல் ஹாசனுக்காக விஜய் தனது நண்பன் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். படத்தைப் பார்த்த கமல் விஜய்யை மனதாரப் பாராட்டியுள்ளார்.இளைய தளபதி விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நண்பர்களாக நடித்த நண்பன் படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஹிட்டாகியுள்ளது. இந்த
படத்தின் மூலம் தமிழில் மீண்டும் தலைகாட்டியிருக்கிறார் நடிகை இலியானா. படம் ஹிட்டான குஷியில் இருக்கும் விஜய் கமலுக்காக தனது படத்தை ஸ்பெஷலாக திரையிட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த உலக நாயகன் இளைய தளபதியின் நடிப்பை பாராட்டினார். இதனால் விஜய் படுகுஷியாகிவிட்டார்.
அண்மையில் நடந்த கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய் அவருடன் சேர்ந்து நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


1/23/2012 05:48:00 pm
Tamilan

Posted in: 
