Showing posts with label A News. Show all posts
Showing posts with label A News. Show all posts

சென்னையில் முதன் முறையாக புதிய தொழிநுட்ப 5D தியேட்டர் (வீடியோ)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 5டி சினிமா தியேட்டர் தொடங்கப்பட்டு உள்ளது. நவீன தொழில் நுட்பத்தில் புதுமையாக இத்திரையரங்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5டி அனிமேஷன், கிராபிக்ஸ் திரைப்படங்கள் மட்டுமே இதில் திரையிடப்படும். பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் தயாரான திரைப் படங்கள் இங்கு திரையிடப் பட உள்ளது.

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க ஜெ! பிரதமருக்கு கடிதம்

ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதிய கடிதத்தில், ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வாழும் நீல மனிதன்! கிருஸ்ணரின் அவதாரமா? - வீடியோ இணைப்பு

நீல மனிதர்கள் இவர்களைப்பற்றி சிலர் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள், மேலதிக உண்மையான தகவல்களுடன் தருகின்றோம்.1960 ஆம் ஆண்டளவில் Kentucky  எனும் நகரின் மலைப்பகுதியில் இணங்கானப்பட்ட இவர்களின் குடும்பத்தார் அனைவருமே நீல நிறத் தோலை உடையவர்கள்.

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்!

மனிதர்களின் ஆயுளை நீட்டிக்க வகை செய்யும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். பாலூட்டி இனங்களில் உள்ள சிர்ட்6′ (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை உருவாக்காமல் நீண்ட நாட்கள் வாழ வைக்க கூடியது என கண்டுபிடித்துள்ளனர். எனவே அந்த மரபணுவை தூண்டி செயல்பட வைக்க

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் விஜய்!


தானே புயலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் புதுச்சேரி மற்றும் கடலூர். அரசியல் தலைவர்கள் நேரில் போய் ஆறுதல் கூறினாலும், இந்த மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் முழுமையாக சேரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்கள் மூலம் முடிந்த வரை உதவிகளைச்

என்.டி.டிவி-ஹிந்து டிவி கைமாறியது தினத்தந்தி!


என்.டி.டி.வி- த ஹிந்து பத்திரிக்கை ஆகியவை இணைந்து தொடங்கிய செய்தி சேனலை தமிழின் நம்பர் ஒன் நாளிதழான தினத்தந்தி நிர்வாகம் வாங்கியிருப்பதாகவும், ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் இந்த புதிய டிவி தந்தி நிர்வாகத்திலிருந்து

தியாகராயர் நகரில் சீல் வைக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட்டன பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!


தியாகராயர் நகரில் உள்ள பல வணிக வளாக கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும், சிவிக் ஆக்ஷன் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்!


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய அம்சமான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ரத்ன அங்கி அணிந்து அதிகாலையில் நம்பெருமாள் எழுந்தருளியதை ரங்கா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசித்தனர்.

10ம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 4ம் தேதி - கல்வி துறை அறிவிப்பு


ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

தேர்வு தேதி :

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் நோட்டீஸ்!


மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விவசாய நிலத்தில் கல்வி நிறுவனம் கட்டியது தொடர்பான புகார் குறித்து விளக்கம் தொடர்பாக, அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது!



முல்லைப் பெரியாறு, கூடங்குளம் போன்ற பிரச்சினைகளில் தமிழகத்துக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப் பிடிப்பதால், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

மதுரை, மேலூர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம் கடையடைப்பு போராட்டம்!


முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்று பிடிவாதமாக பேசி வருகிறது கேரள அரசு. மேலும் தமிழர்களையும், தமிழக வாகனங்களையும் தாக்கி வருகிறார்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கேரள அரசைக் கண்டித்து மதுரை, மேலூர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும்

திருநள்ளாறில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!


காரைக்கால் பகுதியில் உள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் ஆலயத்தின் ஸ்ரீ சனிபகவான் சன்னதியில் சனிப்பெயர்ச்சி விழா இன்று (புதன்கிழமை) காலை 7.51 மணிக்கு நடைபெறுகிறது. சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி அடைவதை ஒட்டி, இவ்விழா நடைபெறுகிறது.
ஆயுதம் ஏந்திய போலீஸôர் உள்பட ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கோயிலைச் சுற்றி 32 இடங்களிலும், குளத்தைச் சுற்றி 12 இடங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 தாற்காலிக பஸ்நிலையங்கள்: திருநள்ளாறு அருகே 3 பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மோட்டார் சைக்கிள், கார் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
 பஸ் நிலையங்களில் இருந்து கோயில் அருகே பக்தர்கள் வருவதற்கு வசதியாக ஷேர் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

சசி குடும்பத்தாரின் நிழல் கூட அதிமுகவில் இருக்கக் கூடாது!


அதிமுகவின் எந்த ஒரு மூலையிலும் சசி குடும்பத்தாரின் நிழல் கூட இருக்கக் கூடாது என்ற முடிவில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு அவர்களை துரத்தி விட்டு விட்ட ஜெயலலிதா, அடுத்த இந்தக் கும்பலிடமிருந்து ஜெயா டிவியை மீட்டு அதை சுத்தப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் பல அதிரடி நடவடிக்கைகளில் அடுத்தடுத்து இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயா டிவியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் சசி குடும்பத்துடன் கை கோர்த்துக் கொண்டு பெருமளவில் விளையாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அனுராதவும், ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகி ஒருவரும் இணைந்து தனியாக விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்கள்.

ஜெயா டிவி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, தரமான டிவியாக மாற்ற ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. 

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

கின்னஸ் சாதனை படைத்த உலகில் மிகவும் சிறிய பெண்!


உலகில் மிகவும் சிறிய பெண்ணாக இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். இந்தியாவின் நாக்பூர் மாநிலத்தில் நடைபெற்ற உயரம் குறைந்தவர்கள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.


Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் முஸ்லிம் மூதாட்டி


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷரிபா. இவரது கணவர் பெயர் இப்ராகீ்ம் குட்டி. இத்தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. 3 பேரும் முதுகலைப் பட்டதாரிகள். 2 மகன்கள் அரபு நாட்டிலும், மகள் தாயுடனும் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு பகுதிக்கு குடிபெயர்ந்த இத்தம்பதியினர் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் அருகில் ஒரு சிறிய கடையை வைத்து தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.

மண்டல பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக கேரளா மாநிலம் ஆரியங்காவில் அன்னதானம் வழங்கி வருகிறார் இஸ்லாமிய மூதாட்டி.

மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மனதார உணவு வழங்கும் அந்த பெண்மணியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.

காலை 8 மணி முதல் இரவு வரை தனி ஆளாக நின்று சமையல் செய்து வரும் இவர் ஜனவரி மாதம் சபரி்மலையில் நடைபெறும் மண்டல பூஜை தினம் வரை அன்னதானம் வழங்க உள்ளதாக கூறுகிறார். மனிதநேயமும், இறைவன் ஒருவனே எண்ணம் உள்ளவர்கள் இருக்கும் வரை இவ்வுலகம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. 

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

கின்னஸ் சாதனை படைத்த நீளமாக கேக் வீடியோ இணைப்பு!


சீனா நாட்டின் ஷாங்காய் நகரத்தில் அமைந்துள்ள புடாங் சங்கரி லா என்ற ஹோட்டலில் இவ் அபூர்வ கேக்கினை தயாரித்துள்ளனர்.
அந்த வகையில் உலகிலே மிகவும் நீளமான கேக் ஒன்று உருவாக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை காப்பாற்ற நிதி திரட்டும் நோக்காக இக் கேக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

மு.க.ஸ்டாலின் மீது கொலை மிரட்டல் வழக்கு


மு.க.ஸ்டாலின் மீது சென்னை போலீஸார் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதில், எனக்கு சொந்தமான 2 கிரவுண்டு நிலம் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்தது. அந்த இடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தேன். அந்த வீட்டை மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு விற்க வேண்டும் என்று பலர் மிரட்டினார்கள். பக்கத்து வீட்டில்தான் மு.க.ஸ்டாலின் வசிக்கிறார்.

எனது வீட்டை பின்னர் வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் மிரட்டி பத்திர பதிவு செய்து கொண்டனர். இதற்கு ரூ.5 கோடிக்கு வங்கி டி.டி.யாக கொடுத்தனர். பின்னர் ரூ.1 கோடியே 15 லட்சத்தை ரொக்கப்பணமாக கொடுத்தனர்.

என்னிடம் வாங்கிய வீட்டை பின்னர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டது போல ஒப்பந்தம் போட்டு கொண்டனர்.

எனது வீட்டை மீட்டு தருவதோடு, இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார் குமார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால் ரெட்டி, சீனிவாசன், சுப்பாரெட்டி, ராஜா சங்கர் ஆகியோர் மீது கொலை மிரட்டல், வீடு புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

சக பெண் கைதிகளுக்கு டிவி, இனிப்பு கொடுத்த கனிமொழி!


2ஜி ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்தார் திமுக எம்பி கனிமொழி. கடந்த திங்கட்கிழமை டெல்லி உயர் நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது

திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான திமுக எம்பி கனிமொழி தன்னுடன் சிறையில் இருந்த சக பெண் கைதிகளைத் தழுவி, அவர்களுக்கு சிறை கேன்டீனில் இனிப்பு வாங்கிக் கொடுத்து தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் சிறையில் பயன்படுத்திய டிவியை சக கைதிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். கனிமொழி திகாரை விட்டு வெளியே வரும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி கனிமொழி சென்னைக்கு வருகிறார். அங்கு கனிமொழி வருகையை விழாவாகக் கொண்டாட திமுக பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது.

பெட்ரோல் விலை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு !


பெட்ரோல் விலையை லீட்டருக்கு ரூ.1.02 குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதற்கேற்ப இந்தியாவில் பெற்றோல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பு நாளை 30ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More