மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விவசாய நிலத்தில் கல்வி நிறுவனம் கட்டியது தொடர்பான புகார் குறித்து விளக்கம் தொடர்பாக, அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை திருமங்கலத்தில் உள்ள சிவரக்கோட்டை பகுதியில், விவசாய நிலங்களை அழித்து, மு.க. அழகிரிக்குச் சொந்தமான தாயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக ராமலிங்கம் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இதனால் கரிசல் குளம் கண்மாய்க்கு வரும் நீர் ஆதாரங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


12/29/2011 02:59:00 pm
Tamilan

Posted in: 
