விஜய் - ஏஆர் முருகதாஸ் படம் தொடங்கியது!


 விஜய்யை வைத்து ஏ ஆர் முருகதாஸ் முதல் முதலாக இயக்கும் புதிய படத்தில், மாடல் அழகி ஏஞ்சலா ஜான்ஸன் நடிக்கக் கூடும் என
முன்பே நாம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது அந்த செய்தி உறுதியாகியிருக்கிறது. விஜய்யின் ஜோடியாக ஏஞ்சலாவை ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ். அதுமட்டுமல்ல, விஜய் - ஏஞ்சலாவை வைத்து ஒரு போட்டோ ஷூட்டையும் நடத்தி முடித்திருக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்தான் இந்த போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார். இதன் மூலம் விஜய் படத்தில் முதல் முறையாக பணியாற்றுகிறார் சந்தோஷ் சிவன் என்பது ஒரு கூடுதல் தகவல்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்துக்குப் பிறகுதான் சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று தெரிகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More