விஜய் நடிக்கும் துப்பாக்கிக்கு அடுத்த தலைவலி !


.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் துப்பாக்கி. இந்த படத்திற்கான கதையையும் விஜய்யிடம் சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டார் முருகதாஸ். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது
இந்நிலையில் இந்த படத்தின் பெயரை தெலுங்கு இயக்குநர் ஜிங்கா ஹரிஷ் பாபு பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. உடனே முருகதாஸின் உதவியாளர்கள் தெலுங்கு இயக்குநரை தொடர்புகொண்டிருக்கிறார்கள். ‘துப்பாக்கி டைட்டிலை எங்களுக்கு தந்து விட முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.


அதற்கு மறுத்துவிட்டார் இயக்குநர். துப்பாக்கி என்னும் பெயரில் அவர் எடுத்து வரும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை பாதிக்கு மேல் முடித்துவிட்டதால் பெயரை இனிமேல் மாற்ற முடியாது.
பெயரை கட்டயமாக தர மட்டேன் என்று சொல்லிவிடாராம்.


இதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநருக்கு பெரிய தொகையைக் கொடுத்து துப்பாக்கி என்னும் டைட்டிலை வாங்கிவிடலாமா அல்லது படத்திற்கு வேறு டைட்டில் வைக்கலாமா? என்று தீவிர யோசனையில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More