மு.க.ஸ்டாலின் மீது கொலை மிரட்டல் வழக்கு


மு..ஸ்டாலின் மீது சென்னை போலீஸார் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதில், எனக்கு சொந்தமான 2 கிரவுண்டு நிலம் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்தது. அந்த இடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தேன். அந்த வீட்டை மு..ஸ்டாலின் குடும்பத்துக்கு விற்க வேண்டும் என்று பலர் மிரட்டினார்கள். பக்கத்து வீட்டில்தான் மு..ஸ்டாலின் வசிக்கிறார்.

எனது வீட்டை பின்னர் வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் மிரட்டி பத்திர பதிவு செய்து கொண்டனர். இதற்கு ரூ.5 கோடிக்கு வங்கி டி.டி.யாக கொடுத்தனர். பின்னர் ரூ.1 கோடியே 15 லட்சத்தை ரொக்கப்பணமாக கொடுத்தனர்.

என்னிடம் வாங்கிய வீட்டை பின்னர் மு..ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டது போல ஒப்பந்தம் போட்டு கொண்டனர்.

எனது வீட்டை மீட்டு தருவதோடு, இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார் குமார்.

இதையடுத்து மு..ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால் ரெட்டி, சீனிவாசன், சுப்பாரெட்டி, ராஜா சங்கர் ஆகியோர் மீது கொலை மிரட்டல், வீடு புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More