விஜய், அஜித், சூர்யா, விக்ரம் மற்றும் திரையுலகினர், ரசிகர்கள் என ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 62வது பிறந்தநாளையொட்டி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என அவரை வாழ்த்தி வருகின்றனர். இதையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சினிமாவில் தனக்கென முத்திரை பதித்த நடிகர்களில் ரஜினிகாந்த்தும் ஒருவர். 80வயது முதல் 1 வயது குழந்தைகள் வரை அனைவராலும் ரசிக்கப்படும் ஒரே ஹீரோ என்றால் அது நம்ம சூப்பர்ஸ்டார் தான். தன்னுடைய ஸ்டைலான நடிப்பு, பேச்சு என அசத்தி இவருக்கு இதுவரை உலகமே காணாத ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்றால் அது மிகையாகாது.

ரஜினிக்கு ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா போன்ற பவ நாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. இவரது படம் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்கள் தீபாவளி போல் கொண்டாடி மகிழ்வார்கள். பொதுவாழ்ககையில் இயல்பு, எளிமை, தனிமை விரும்பும் நம்ம சூப்பர்ஸ்£ர் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
 
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் இன்று (12-ந் தேதி) தாம்பரம் செல்வ விநாயகர் கோவில், பெசன்ட்நகர் வேளாங்கண்ணிமாதா கோவில், சைதை இளங்காளியம்மன் கோவில் தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் மயிலை ராகவேந்திர கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More