படபிடிப்பில் ஆபத்தில் சிக்கினார் ப்ரியாமணி!


கன்னடப் படம் ஒன்றின் படப்பிடிபு்புக்காக கர்நாடகத்தில் உள்ள முத்தாநதி காட்டுக்கு காரில் சென்றார். அவருடன் மேக்கப் கலைஞர்களும் இருந்தனர்.படப்பிடிப்பு நடந்த இடத்தை நெருங்கிய போது கார் திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி நொறுங்கியது.

அருகாமையிலிருந்து பொதுமக்கள் ஓடிச்சென்று காருக்குள் இருந்த பிரியாமணியையும் மற்றவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் பிரியாமணி காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விபத்தால் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் தாமதமாக வந்து சேர்ந்தார் ப்ரியாமணி. படப்பிடிப்பு பின்னர் தொடர்ந்தது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More