திரையுலகை விட்டு வலகுகிறார் ஸ்னேகா தகவல்!


நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொள்ள உள்ள நடிகை ஸ்னேகா, திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது.தெலுங்கில் தயாராகி வரும் ராஜன்னா என்ற புராண படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

ராஜன்னா படத்தில் நாகார்ஜூனா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் புனித கலசம் ஒன்றை ஸ்னேகா தலையில் சுமந்து வருவது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

ஸ்னேகாவின் காதல் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ராஜன்னாவுக்கு பிறகு ஸ்னேகா சினிமாவுக்கு விடை பெற்று கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.நயன்தாராவை போல கடைசியாக பக்தி படம் ஒன்றில் நடித்துவிட்டு, சினிமாவுக்கு விடை பெற ஸ்னேகா திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More