ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் முஸ்லிம் மூதாட்டி


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷரிபா. இவரது கணவர் பெயர் இப்ராகீ்ம் குட்டி. இத்தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. 3 பேரும் முதுகலைப் பட்டதாரிகள். 2 மகன்கள் அரபு நாட்டிலும், மகள் தாயுடனும் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு பகுதிக்கு குடிபெயர்ந்த இத்தம்பதியினர் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் அருகில் ஒரு சிறிய கடையை வைத்து தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.

மண்டல பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக கேரளா மாநிலம் ஆரியங்காவில் அன்னதானம் வழங்கி வருகிறார் இஸ்லாமிய மூதாட்டி.

மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மனதார உணவு வழங்கும் அந்த பெண்மணியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.

காலை 8 மணி முதல் இரவு வரை தனி ஆளாக நின்று சமையல் செய்து வரும் இவர் ஜனவரி மாதம் சபரி்மலையில் நடைபெறும் மண்டல பூஜை தினம் வரை அன்னதானம் வழங்க உள்ளதாக கூறுகிறார். மனிதநேயமும், இறைவன் ஒருவனே எண்ணம் உள்ளவர்கள் இருக்கும் வரை இவ்வுலகம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More