யங் சூப்பர் நடிகர் ஆர்யா தான் - மாதவன் தகவல்!

மணிரத்னத்தின் அலைபாயுதே படம் மூலம் அறிமுகமாகி, இளம் பெண்களின் கனவு நாயகனாக மேடி எனும் பெயரில் வலம் வந்தவர் நடிகர் மாதவன். தொடர்ந்து ரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்த மாதவன், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். சிறு தடுமாற்றத்திற்கு பிறகு, தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்போது லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடித்து வருகிறார். வேட்டை படத்தில் நடித்த அனுபவம் குறித்து மாதவன் நம்மிடம் பேசியதாவது, அலைபாயுதே படத்தில் அறிமுகமாகி, திரும்பி பார்ப்பதற்குள் பல வருஷம் உருண்டோடி விட்டது.

வேட்டை படத்‌தின் கதையை லிங்குசாமி சொன்னபோது, நீங்க தான் இந்த படத்தில் நடிக்கணும், இல்லேனா, இந்த கதையை அப்படியே தூக்கி வச்சுடுவேன் என்று லிங்குசாமி கூறினார். அந்தளவுக்கு என் மேல் அவர் நம்பிக்கை வச்சிருந்தார். அவருக்காக நான் ஒப்புக்கொண்டு இந்த படத்தில் நடித்தேன். நான் எப்பவும் ஒன்று சொல்வேன். தமிழில் யங் சூப்பர் நடிகர்னா அது ஆர்யா தான். அவர் இந்த படத்துல என் தம்பியா நடிச்சுருக்காரு. படப்பிடிப்பில் எப்போதும் என்னை லந்து பண்ணிக்கிட்டே இருப்பான் ஆர்யா. இரண்டு பேரும் இந்தபடத்துல சூப்பரா நடிச்சிருக்கோம். படப்பிடிப்பின் போது எங்களுக்குள் எந்த போட்டியும் கிடையாது. எல்லாமே செட்டுக்கு வெளியே தான். குறிப்பாக சீட்டு விளையாடுவதில் தான் எங்களுக்குள் அதிகம் போட்டியிருக்கும். சீட்டு விளையாட்டுல ஆர்யா, என்கிட்டே இருந்து ரொம்ப காசு அடிச்சுட்டான். அதிகமுறை அவன் தான் ஜெய்ச்சிருக்கான்.

படப்பிடிப்பு தளத்திலேயே நான் தான் ரொம்ப சீனியர்னு எல்லோரும் என்னை பீல் பண்ண வச்சிடாங்க. லிங்குசாமி கூட மாதவன், செட்டிற்கு வந்த மம்முட்டி வந்த மாதிரி ஒரு உதறல் இருக்கும் என்று சொல்றார். ஆனால் செட்டில் நான் ரொம்ப ஜாலியாத்தான் இருப்பேன். மன்மதன் அம்பு சூட்டிங்கில் கமல் சார் கூட சேர்ந்து நடிச்சப்போ, அவர் என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கொண்டார். அதை என்னால் எப்பவும் மறக்கவே முடியாது.

தமிழில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று கேட்கீறாங்க...? நான் வருஷத்துக்கு ஒரு படம் பண்ணிகிட்டுதான் இருந்தேன். இடையில் ஏனோ, தானோ என்று சில படங்களில் நடித்து மாதவன் மரியாதையை குறைச்சிட்டேன். அப்புறம் தான் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிச்சேன். இந்தியில் கூட இரண்டு படத்தில் பிஸியாக இருக்கேன். அடுத்து இரண்டு தமிழ் படங்களில் நடிக்க உள்ளேன்.

தமிழ் சினிமாவிற்கு நான் அறிமுகமானதை விட இப்போது பலமடங்கு வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் ரொம்ப மாறிட்டாங்க, படத்தோட ரிசல்ட்ட கூட உடனே சொல்றாங்க. நான் சினிமாவில் அறிமுகமாகும் ‌போதே எனக்கு 30வயசு. அதற்கு அடுத்து எவ்வளவோ மாற்றங்கள். இப்பகூட என்னை பாருங்க, உடல் பருமனாக, முடி எல்லாம் நரைத்து விட்டது. காலம் போய்கிட்டே இருக்கு. அதேசமயம் எனக்கான ரசிகர்கள் எப்பவும் இருப்பாங்க என்று நம்புகிறேன்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More