திருப்பதி கோவிலுக்கு ஜீன்ஸ் - டி சர்டில் கவர்ச்சியாக சென்ற தமன்னாவுக்கு பக்தர்கள் கண்டனம்!


திருமலைக்கு ஜீன்ஸ் - டி சர்டில் கவர்ச்சியாக வந்து சாமி கும்பிடுவதா என நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இன்று ரச்சா படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும் ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி..பி. வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

தமன்னா ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார். ஜீன்ஸ் அணிந்த பெண்களை கோவில் நிர்வாகத்தினர் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. ஆனால் தமன்னா சுதந்திரமாக வந்து தரிசனம் செய்தது சக பெண் பக்தர்களை எரிச்சல்பட வைத்தது. பல லட்சம் பக்தர்கள் கூடும் இடத்தில் இப்படி கவர்ச்சி காட்டி வரலாமா என கோவில் நிர்வாகத்தினரைக் கண்டித்தனர். இதற்கிடையில் அவசரமாக தரிசனத்தை முடித்துவிட்ட தமன்னா புறப்பட்டுச் சென்று விட்டார்

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More