தனுஷ் சக நடிகர்? ஸ்ருதிஹாசன் விளக்கம்!


நடிகர் தனுஷூடன் ஸ்ருதிஹாசன் நெருங்கி பழகுவதாகவும், அதனால் ஐஸ்வர்யா வீட்டில் புகைச்சல் உண்டாகியுள்ளதாக வந்துள்ள செய்திக்கு நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன் 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இப்போது தனுஷூடன் 3 படத்தில் நடித்து வருகிறார். படம் வெளிவருவதற்கு முன்பே 3 படத்தில் இடம்பெற்றிருக்கும் கொலவெறி பாடல் தனுஷை பிரதமர் விருந்தில்
பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் கொலவெறி சொந்தக்காரர் தனுஷூம் - 3 படத்தின் ஹீரோயின் ஸ்ருதி ஹாசனும் ரொம்பவே நெருக்கமாக இருப்பதாகவும், இதனால் தனுஷின் மாமனார் கொலவெறியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை பற்றி கேள்விப்பட்ட ஸ்ருதி ரொம்பவே வருத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் வலைதளத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த தகவல் முழுக்க முழுக்க அடிப்படை ஆதாரமற்றது, தனுஷ் என்னுடன் நடிக்கும் சக நடிகர். ஐஸ்வர்யா எனது நெருங்கிய தோழி. இப்படிப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் சம்பந்தப்பட்டவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் வேதனைப்படுத்தும். புத்தாண்டு அன்று நான் என் தாயாருடன் கோவாவில் இருந்தேன். சினிமா நட்சத்திரம் என்றாலே வதந்திகளுக்கு ஆளாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அப்படியே இருந்தாலும் ஏற்கனவே திருமணம் ஆன, அதுவும் எனக்கு நெருக்கமான குடும்பத்தின் உறுப்பினருடன் இப்படி இணைத்துப் பேசுவது வருத்தம் அளிக்கிறது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More