தியாகராயர் நகரில் சீல் வைக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட்டன பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!


தியாகராயர் நகரில் உள்ள பல வணிக வளாக கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும், சிவிக் ஆக்ஷன் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்தது. இந்த குழுவினர் ஆய்வு நடத்தி தியாகராயநகரில் உள்ள பல கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி ரெங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் உள்ள பெரிய வணிக வளாகங்கள் உள்பட, 28 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சென்னை தியாகராயநகரில் சீல் வைக்கப்பட்ட 28 கட்டிடங்கள் செவ்வாய்கிழமை மாலை திறக்கப்பட்டன. பொங்கல் வியாபாரத்திற்காக கடை திறக்க அனுமதி கிடைத்துள்ளதால் கடை உரிமையாளரும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More