நான் தவறு செய்துவிடேன் சிம்பு வருத்தம்!

தமிழ் திரையுலகில் நண்பனின் முன்னோட்டக் காட்சியை பார்த்து விட்டு நடிகர் சிம்பு, நண்பனில் நடிக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் ஆரம்பத்தில் சிம்பு தான் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனது. ஆனால் பல்வேறு காரணங்களால் சிம்பு படத்திலிருந்து விலகிக் கொள்ள அப்படத்தில் ஜீவா நடித்தார்.

அதன் பின்பு ஜீவா சிம்பு இருவருமே பத்திரிகையாளர்
சந்திப்பில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசினர். இதனால் இருவரும் எதிரும் புதிருமாகி விட்டனர் என்று ரசிகர்கள் மனதில் கருத்து பரவியது. இந்நிலையில் சிம்பு தனது டிவிட்டர் இணையத்தில் நண்பன் குறித்து, நண்பன் படத்தின் முன்னோட்ட காட்சிகள் அருமையாக இருக்கிறது. நண்பன் படத்தில் நடிக்காதது குறித்து வருத்தம் அடைகிறேன். ஷங்கர் சார் மற்றும் விஜய் அண்ணா இருவரோடும் பணியாற்றும் வாய்ப்பை தவறியதில் வருத்தம். ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இருவருமே அழகாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More