வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்!


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய அம்சமான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ரத்ன அங்கி அணிந்து அதிகாலையில் நம்பெருமாள் எழுந்தருளியதை ரங்கா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசித்தனர்.


108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பெருமையுடன் அழைக்கப்படும் சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 25-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல்பத்து நிகழ்ச்சியின் நிறைவுநாளான புதன்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும், மயிலாப்பூர் மாதவப்பெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதேபோல் மதுரை கூடல் அழகர்பெருமாள் கோவில் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More