பில்லா 2 ஷூட்டிங்கை நிறுத்த கோரி சினிமா தொழிலாளர்கள் முற்றுகை!

அஜீத் பட ஷூட்டிங்கை நிறுத்த கோரி சினிமா தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பள பிரச்னை காரணமாக தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங்
பாதித்திருக்கிறது. ஆனால் ஒரு சில படங்களின் ஷூட்டிங் மட்டும் வெளியூர்களில் நடக்கிறது. அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு சென்ற சினிமா தொழிலாளர்கள் சிலர், தமிழ் படவுலகம் ஸ்டிரைக்கில் இருக்கிறது. உங்கள் பட ஷூட்டிங்கை எப்படி நடத்தலாம். உடனே ஷூட்டிங்கை நிறுத்துங்கள் என்று கூறி முற்றுகையிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பட தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி கூறும்போது, "இப்படத்தில விடுபட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறோம். சில பெப்சி உறுப்பினர்கள் வந்து தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்தனர். குறிப்பிட்ட சினிமா ஸ்டுடியோவுடன் நாங்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அங்குள்ள உபகரணங்கள் மற்றும் ஊழியர்களை பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் இருக்கிறது. சம்பள பிரச்னையில் இருக்கும் யாரையும் இந்த பணியில் ஈடுபடுத்தவில்லை என அவர்களிடம் விளக்கினோம். பின் தொடர்ந்து ஷூட்டிங் நடத்தினோம். எந்த சங்கத்துக்கும் விரோதமாக நாங்கள் போக விரும்பவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்பே பில்லா 2 பட ஷூட்டிங் தொடங்கிவிட்டோம். அதை முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். திரையுலக பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்காக ஐதராபாத்தில் நாங்கள் ஷூட்டிங் நடத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது" என்றார்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More