ரஜினியின் 8 பேக்ஸ் கோச்சடையான்!


கிட்டத்தட்ட சிவபெருமானின் ருத்ரதாண்டவம் மாதிரியான ஒரு தோற்றம் அது. பார்த்த உடன் சிலிர்க்க வைக்கிறது.இந்த ஸ்டில்லில் ரஜினியின் உடல் 8 பேக்ஸ் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. Photorealistic படம் என்பதால் இது சாத்தியம்தான்.
இந்த ஸ்டில் வெளியானது முதல் மீடியா மற்றும் ரசிகர் மத்தியில் ஒரே பரபரப்பு.எங்கும் ரஜினியின் கோச்சடையான் ஸ்டில்களே. அதற்கேற்ப, ரஜினியும் பாரபட்சமின்றி அத்தனை நாளிதழ்களுக்கும் கோச்சடையான் டிஸைனை விளம்பரமாகக் கொடுத்திருந்தார்.

இந்தியாவின் அத்தனை முன்னணி இணையதளங்களும் 'கோச்சடையான் பர்ஸ்ட் லுக்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கில டிஸைன்களை வெளியிட்டிருந்தனர்.

கோச்சடையான் பட அறிவிப்பு வெளியானபோது, ரஜினி ரசிகர்களுக்கே அதில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் இப்போது முதல் ஸ்டில்லைப் பார்த்ததிலிருந்து அவர்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் - சௌந்தர்யா ரஜினி குழுவுக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றிகிடைத்துள்ளது எனலாம்!

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More