விஜய்க்கு சூப்பர் ஸ்டார் விருது!


சூப்பர் ஸ்டார் ரஜினி பெயரில் இந்த ஆண்டு விஜய்க்கு விருது வழங்கியுள்ளனர்.எடிசன் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்தது. விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், ஆர்கே, பேபி சாரா, கோவை
சரளா, மயக்கம் என்ன நாயகி ரிச்சா கங்கோபாத்யாயா, இனியா, லட்சுமிராய், லட்சுமி ராமகிருஷ்ணன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறந்த பாடலாசிரியர் விருது நா முத்துகுமாருக்கும், இசையமைப்பாளர் விருது ஹாரிஸ் ஜெயராஜுக்கும் வழங்கப்பட்டது.
இந்த விருது விழாவில், விஜய் தன் படங்களில் ரஜினி பற்றிப் பேசி ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கிய காட்சிகளைக் காட்டினர். பின்னர் ரஜினி விருதினை அவருக்கு வழங்குவதாக அறிவித்தனர்.
விருதினைப் பெற்றுக் கொண்ட விஜய், ரசிகர்களை ஆஹா ஓஹோவெனப் பாராட்டினார். நண்பன் படத்திலிருந்து ஒரு பாட்டுப் பாடினார்
 
Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More