கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் டும் டும் டும் - ரஜினி, கமல், விஜய்!

பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் மகள் ஜனனிக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் ஆர் சதீஷ்குமாருக்கும் வரும் அடுத்த மாதம் 3-ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. சமீபத்தில் இவ்விருவருக்கும் நிச்சயதார்த்தம் வீட்டிலேயே எளிமையாக நடத்தப்பட்டுவிட்டதால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.காலை 10 மணிக்கு திருமணமும் அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த இரு வாரங்கள் லண்டனில் கோச்சடையான் படப்பிடிப்புக்காகச் சென்றிருந்த கேஎஸ் ரவிக்குமார் இப்போது சென்னை திரும்பிவிட்டார். முக்கிய பிரமுகர்களுக்கு குடும்பத்தினருடன் போய் அழைப்பிதழ்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த திருமணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் கமல்ஹாஸன், விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் திரளாக வரவிருக்கிறார்கள்.

 Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More