அஜித்தை இயக்கும் வெங்கட்பிரபு, யுவன் சங்கர் ராஜா!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விரைவில் தயாரிப்பாளராக அவதரிக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். இப்போது புதிய செய்தி என்னவென்றால் அவர் தயாரிக்க இருக்கும் அந்த படத்தில் அஜித் தான் ஹீரோவாம். சில பல ஆண்டுகளுக்கு முன்னர் டைரக்டர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய 3பேரும் சேர்ந்து ஒயிட் எலிபேன்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். நா‌ளடைவில் மூவருக்கும் இடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக அந்த தயாரிப்பு நிறுவனம் வெறும் பெயர் அளவில் மட்டுமே இருந்து வந்தது.

இந்நிலையில், மங்காத்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வெங்கட்பிரபு-அஜித் கூட்டணி அமைக்கபோவதாக பலமுறை செய்தி வந்தது. இதை வெங்கட்பிரபுவும் உறுதிப்பட தெரிவித்து இருந்தார். அதன்படி வெங்கட்பிரபு-அஜித் கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்தை தான் யுவன் சங்கர் ராஜா, ஒய்ட் எலிபேன்ட் பேனரில் தயாரிக்க இருக்கிறாராம். மேலும் இப்படத்திற்கு யுவனே இசையமைக்க இருக்கிறாராம். விரைவில் இதுப்பற்றிய ‌தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More