முதன்முறையாக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!

நடிகர், நடிகைகள் பலர் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் விளம்பர படங்களில் நடித்து பெரும் வருவாய் பார்த்து வருகின்றனர். ஆனால் தமிழ் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கமலஹாசன் மட்டும் எந்த விளம்பர படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தனர்.

தாங்கள் இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதால், ரசிகர்களை தவறாக திசை திருப்பவது போலாகிவிடும் என்ற காரணத்தால் இத்தகைய முடிவை மேற்கொண்டிருந்தனர். கமல் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். 50 ஆண்டுகளாக கமல் சினிமாவில் இருக்கிறார். இதுவரை அவர் விளம்பரங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல் தடவையாக விளம்பர படங்களில் நடிக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் எற்கனவே இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான, கரீனாகபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.

சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குவதாக கமல் தெரிவித்துள்ளார். சமூக சேவையில் அக்கறையுள்ள விளம்பர படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

அல்லயன்ஸ் மீடியா என்ற நிறுவனம்தான் கமலை வைத்து விளம்பரங்களை எடுக்கப் போகிறது. இந்த நிறுவனம்தான் அமிதாப், ஷாரூக், சாயிப் அலிகான், கரீனா என பல பிரபலங்களையும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More