பில்லா 2 படத்துக்காக ஹெலிகாப்ட‌ரிலிருந்து குதித்த அ‌‌‌‌ஜீத் !

முதுகுத்தண்டில் ஏழு அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவர் அ‌‌‌‌ஜீத். ஒரேயொரு அறுவை சிகிச்சை செய்து கொண்டால்கூட நம்மால் ஒரு பக்கெட் தண்ணியை‌த் தூக்க இயலாது. ஆனால் அ‌‌‌‌ஜீத்...? சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சியிலும் அ‌‌‌‌ஜீத் அதிக ‌ரிஸ்க் எடுக்காததற்கு இந்த அறுவை
சிகிச்சையே காரணம். கடுமையான முதுகு வலியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு கேரவனில் ட்‌‌ரீட்மெண்ட் எடுத்த நாட்கள் அதிகம். அதையெல்லாம் பில்லா 2-வில் அனாயசமாக கடந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் டூப் போடாமல் ‌ரிஸ்க்கான காட்சி அனைத்திலும் அ‌‌‌‌ஜீத்தே நடித்துள்ளார். குறிப்பாக ஹெலிகாப்ட‌ரிலிருந்து குதிக்கும் காட்சி. ஹெலிகாப்ட‌ரில் ஒரு கையில் தொங்கிவரும் அந்தக் காட்சி பார்க்கிற எவரையும் மெய் சிலிர்க்க வைக்கும். இது பற்றி இணையத்தில் எழுதியிருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் Stefan Richter ஸ்டண்ட் விஷயத்தில் நானே ஒரு டேர்டெவில். நம்புங்கள்... அ‌‌‌‌ஜீத் ஹெலிகாப்ட‌ரில் தாவி குதித்து ஒரு கையால் தொங்கியபடி வரு‌ம் காட்சியில் என்னுடைய நரம்புகளில் ரத்தம் உறைந்துவிட்டது என குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல் ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறாராம் அ‌‌‌‌ஜீத்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More