தங்கச்சி அஸ்வினி ராயையும் சினிமாவில் களம் இறக்குகிறார் லட்சுமி ராய்!

நடிகை லட்சுமிராய் தன்னுடைய தங்கச்சி அஸ்வினி ராயையும் சினிமாவில் களம் இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கற்க கசடற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். முன்னணி நடிகையாக வலம் வர தொடர்ந்து போராடி வரும் லட்சுமிராய், அவ்வ‌ப்போது காஞ்சனா, மங்காத்தா போன்ற ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய தங்கை அஸ்வினி ராயையும் சினிமாவில் களம் இறக்க திட்டமிட்டு வருகிறார்.

இதற்கு வசதியாக எங்கே போனாலும் தனது தங்கையையும் கூடவே கூட்டிக் கொண்டு போகிறார். சமீபத்தில் கூட டில்லியில் நடந்த ரீமா சென்-ஷிவ்கரண் சிங் திருமணத்திற்கு அஸ்வினியையும் அழைத்து போனார். மேலும் சில தயாரிப்பாளர்களிடமும் தன் தங்கையை அழைத்து சென்று சான்ஸ் தேடி வருகிறார். லட்சுமிராயை போன்று விரைவில் அவரது தங்கை அஸ்வினியையும் திரையில் காணலாம்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More