சென்னையில் முதன் முறையாக புதிய தொழிநுட்ப 5D தியேட்டர் (வீடியோ)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 5டி சினிமா தியேட்டர் தொடங்கப்பட்டு உள்ளது. நவீன தொழில் நுட்பத்தில் புதுமையாக இத்திரையரங்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5டி அனிமேஷன், கிராபிக்ஸ் திரைப்படங்கள் மட்டுமே இதில் திரையிடப்படும். பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் தயாரான திரைப் படங்கள் இங்கு திரையிடப் பட உள்ளது.


தினமும் 30 காட்சிகள் திரையிடப்படும். 32 இருக்கைகள் உள்ளன. டிக்கெட் கட்டணம் ரூ.150. இந்த தியேட்டரின் இருக்கைகள் முன், பின் மற்றும் பக்கவாட்டில் சுழலும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. சீட்பெல்ட் அணிந்து கொண்டுதான் படத்தை பார்க்க முடியும். திரையில் என்ன காட்சிகள் வருகிறதோ அதற்கேற்ப தியேட்டர் சூழ்நிலை மாறும். உதாரணமாக மழை பெய்தால் படம் பார்ப்பவர்கள் இடி மின்னல், காற்று மழையை உணர முடியும். நெருப்பு, புகை தொடர்பான காட்சிகள் வந்தால் தியேட்டரில் வெப்பத்தையும் புகையையும் உணரலாம்.

இதற்காக வெளிநாட்டு தொழில் நுட்பங்களை கொண்டு ரூ.1 1/2 கோடி செலவில் இந்த தியேட்டரை உருவாக்கி உள்ளனர். வெளிநாடுகளில் பிரபலமான இந்த பிக்ஸ் 5டி தியேட்டர் சென்னையில் துவங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை.

இந்த தியேட்டரை நடிகர் அருண்விஜய், இந்திய அழகியும் நடிகையுமான ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த தியேட்டரை அமைத்துள்ள ரவிசங்கர் தமிழகத்தில் மேலும் பல நகரங்களில் இத் தியேட்டரை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். 5D தொழிநுட்பம் எவ்வாறு செயற்படுகிறது தொடர்பான அறிவைப்பெற கீழுள்ள வீடியோவைப்பாருங்கள்.


Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More