கார்த்திக்கு ஜோடியாகும் சமந்தா!

சமந்தாவுக்கு தமிழில் அப்படி ஒரு மவுசு. முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்கள் சமந்தா கால்ஷீட் இருந்தா நல்லாருக்குமே என்று கேட்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்துவிட்டது.இத்தனைக்கும் தமிழில் ஒரு படம் கூட பெரிதாக ஓடவில்லை.
இனி வெளியாகி ஓடினால்தான் உண்டு. தாறுமாறான அதிருஷ்டம் என்பது இதுதான் போலிருக்கிறது.இருக்கட்டும்... இப்போது அவர் கார்த்திக்கின் விருப்ப நாயகியாகியுள்ளார். கார்த்தி நடிக்கும் அடுத்த படமான பிரியாணியில் சமந்தா தான் ஜோடி.

வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரன் ஹீரோவுக்கு சமமான வேடத்தில் நடிக்கிறார்.வழக்கம் போல யுவன் சங்கர் ராஜா இசையைக் கவனிக்க, சக்தி சரவணன் கேமிரா பிடிக்கிறார்.படத்தின் ஸ்க்ரிப்டுக்கு இறுதி வடிவம் கொடுக்க, சோனாவின் பார்ட்டியைக் கூட தியாகம் செய்துவிட்டு சமீபத்தில் மலேசியாவில் தங்கியிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. முன் தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டனவாம். விரைவில் பூஜை அறிவிப்பு வரவிருக்கிறது!


Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More