தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நண்பன் என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து படத்தின் பாடல் வெளியீடு விழா இந்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
தன்னுடைய பெஸ்ட் இயக்குனர் ஷங்கர் தான் என்று இளைய தளபதி விஜய் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறும்போது, இதுவரை என்னை இயக்கிய இயக்குனர்களில் ஷங்கர் தான் சிறந்தவர், அவருடைய படத்தில் நடிக்க பல நாட்கள் காத்துக் கிடந்தேன், தற்போது இந்த வாய்ப்பை சந்தோஷமாக முடித்துள்ளேன்.
என்னுடைய கேரியரில் முக்கியமான படமாக இது இருக்கும். ஷங்கர் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல சிறந்த நடிகரும் கூட, ஒவ்வொரு காட்சிக்கு முன்னாடி அவர் நடித்துகாட்டுவார், அவரின் நடிப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எனக் கூறினார்.


12/21/2011 05:41:00 pm
Tamilan

Posted in: 
