சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கும், இளைய தளபதி விஜய் இயக்குனர் விஜயின் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக அமலபால் நடிக்க போவதாக கமிட் ஆகியுள்ளார். விஜய் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் இப்படம் தொடங்க உள்ளதை தனது டுவிட்டரில் தெரிவித்தார்.
விஜய், ஜி.வி.பிரகாஷ் இணைவது இதுவே முதல் முறையாகும். இப்படத்தில் விஜயை கண்டிப்பாக பாடவைப்பேன் என ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். எனவே மீண்டும் விஜயின் குரலில் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். திரையுலகில் தளபதி தான் முதல் முதலில் பாடலை பட ஆரம்பித்து வைத்தார் என்பது குறிபிடதக்கதாகும்.


12/16/2011 03:55:00 pm
Tamilan
Posted in: 
