ஷங்கர் இயக்கத்தில் விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடித்துள்ள நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 23-ம் தேதி கோவையில் நடக்கிறது.
கோவையில் நடக்கும் முதல் பிரமாண்ட சினிமா இசை வெளியீட்டு விழா.இந்த விழாவுக்கு நண்பன் படத்தின் ஒரிஜினல் கதையான 3 இடியட்ஸின் நாயகன் அமீர்கான் வருவார் என்று கூறப்படுகிறது.
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள நண்பன் பொங்கல் ஸ்பெஷலாக களமிறங்குகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏழாம் அறிவில் சொதப்பிவிட்டதால், இந்தப் படத்துக்கு மிக கவனத்துடன் அவர் இசையமைத்திருப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மிகப் பிரமாண்டமாக இந்த விழா நடக்கிறது.


12/16/2011 11:28:00 am
Tamilan

Posted in: 
