Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

சென்னையில் முதன் முறையாக புதிய தொழிநுட்ப 5D தியேட்டர் (வீடியோ)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 5டி சினிமா தியேட்டர் தொடங்கப்பட்டு உள்ளது. நவீன தொழில் நுட்பத்தில் புதுமையாக இத்திரையரங்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5டி அனிமேஷன், கிராபிக்ஸ் திரைப்படங்கள் மட்டுமே இதில் திரையிடப்படும். பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் தயாரான திரைப் படங்கள் இங்கு திரையிடப் பட உள்ளது.

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க ஜெ! பிரதமருக்கு கடிதம்

ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதிய கடிதத்தில், ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சக பெண் கைதிகளுக்கு டிவி, இனிப்பு கொடுத்த கனிமொழி!


2ஜி ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்தார் திமுக எம்பி கனிமொழி. கடந்த திங்கட்கிழமை டெல்லி உயர் நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது

திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான திமுக எம்பி கனிமொழி தன்னுடன் சிறையில் இருந்த சக பெண் கைதிகளைத் தழுவி, அவர்களுக்கு சிறை கேன்டீனில் இனிப்பு வாங்கிக் கொடுத்து தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் சிறையில் பயன்படுத்திய டிவியை சக கைதிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். கனிமொழி திகாரை விட்டு வெளியே வரும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி கனிமொழி சென்னைக்கு வருகிறார். அங்கு கனிமொழி வருகையை விழாவாகக் கொண்டாட திமுக பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது.

பெட்ரோல் விலை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு !


பெட்ரோல் விலையை லீட்டருக்கு ரூ.1.02 குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதற்கேற்ப இந்தியாவில் பெற்றோல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பு நாளை 30ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் பலாக்காரம் செய்ததாக 5 போலீஸார் சஸ்பெண்ட்!


இருளர் சமுதாயப் பெண்கள் நான்குபேரை பாலியல் பலாக்காரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து திருக்கோவிலூர் காவல்நிலைய போலீசார் 5 பேரை பணி இடை நீக்கம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மண்டபம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசிக்கும் பழங்குடியினத்தவர்களை திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்கள் நான்கு பேரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர், தலைமைக்காவலர் உள்ளிட்ட 5 பேரை முதலமைச்சர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


அறிமுகமாகிறது - கூகுள் மடிக்கணினி


டிஜிட்டல் உலகத்திற்கு கூகுளின் பங்களிப்பு மிக அதிகமாகும். படிப்படியாக அது ஆன்ட்ராய்டில் காலடி எடுத்து வைத்தது. இப்போது அந்த ஆன்ட்ராய்டு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய ஒரு புதிய டேப்லட்டை களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறது. அந்த மடிக்கணினிடின் படத்தை கூகுள் வெளியிட்டிருக்கிறது.
ஆனால் இந்த மடிக்கணினி எப்போது சந்தைக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால் அந்த மடிக்கணினிடின் பெயர் நெக்சஸ் டேப் என்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது நவீன தொழில் நுட்பங்களுடன் வரும் என்றும் தெரிகிறது.
குறிப்பாக, இந்த மடிக்கணினிடுக்கான புதிய வெர்சன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்குவதில் கூகுள் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த புதிய மடிக்கணினி க்வாட்-கோர் என்விஐடிஐஏ டெக்ரா 2 பிராசஸர் கொண்டு வரும் எனத் தெரிகிறது.
எனவே,இதன் செயல் திறன் மிக அபாரமாக இருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளத்தைக் கொண்டு வருவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மடிக்கணினிடின் ஆன்ட்ராய்டு இயங்குதளம் மல்டி டாஸ்க் செய்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும். தவிர, தகவல் பரிமாற்றம் செய்யவும் மற்றும் உரையாடலுக்கும் தகுந்த மடிக்கணினிடாக இது இருக்கும். இதன் யூசர் இன்டர்பேஸ் மூலம் இந்த மடிக்கணினிடை மிக எளிதாக இயக்கலாம். மேலும் இந்த மடிக்கணினிடில் கூகுள் க்ளவுட் வசதிகளையும் வழங்க இருக்கிறது.
ஏராளமான நிறுவனங்கள்  மடிக்கணினிடுகளைத் தயாரிப்பதில் அதிக முனைப்பு காட்டுகின்றன. எனவே, இந்த புதிய மடிக்கணினிடைக் கொண்டு வர கூகுள் வேறு  ஒரு நிறுவனத்துடன் கைகோர்க்கும் என்று தெரிகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை

தீவிபத்து - சென்னை விமான நிலையத்தில் 2 இடங்களில்!


சென்னை விமான நிலையத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஹோட்டல் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் பணிப் பெண் ஒருவர் காலை 4.15 மணியளவில் காரில் வந்து இறங்கினார். அதன்பிறகு அவர் வந்த கார் விமான நிலையத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டது.

அப்பகுதியில் அதிகளவிலான கார்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பணிப் பெண் வந்த காரின் முன்பகுதியில் இருந்து லேசான புகை கிளம்பியது. சில நிமிடங்களில் புகை அதிகமாகி தீப்பற்றி எரிந்தது.

இதனை கண்ட விமான நிலைய பணியாளர்கள், விமான நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி மற்றும் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காலை 4.45 மணிக்கு பன்னாட்டு விமான நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் பெயர் பலகையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ஹோட்டல் பணியாளர்கள் அங்கிருந்த தீயணைப்பு கருவிகள் மூலம், தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சபரிமலை நடைதிறப்பு!

கார்த்திகை 1ம் தேதியான நேற்று அதிகாலை சபரிமலை நடை திறந்த போது, சன்னிதானத்திலும் சுற்றுப்புறங் களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மண்டலகால பூஜைக்காக சபரிமலை நடை நவ., 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. ஒரு ஆண்டாக சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் நடத்திய சசி நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பதவியேற்றனர். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. கார்த்தியை 1ம் தேதி (நேற்று) அதிகாலை மூன்று மணிக்கு புதிய மேல்சாந்தி பாலமுரளிநம்பூதிரி நடை திறந்த போது சன்னிதானத்தில் கூடியிருந்த பக்தர்கள் சரண கோஷமிட்டனர். தொடந்து கோயிலினுள் தீபம் ஏற்றிய மேல்சாந்தி விநாயகர் கோயிலில் பூஜைகள் நடத்திய பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். தந்திரி கண்டரரு மகேஸ்வரரு மண்டல காலத்துக்கான நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். பின், ஸ்ரீகோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கணபதிஹோமம் நடத்தினார். காலை 7 மணிக்கு நெய்யபிஷேகம் நிறுத்தப்பட்டு உஷபூஜை நடந்தது.

             12 மணி வரை நெய்யபிஷேகம் நடந்தது. காலையில் நடை திறக்கப்பட்ட போது பக்தர்களின் வரிசை சரங்குத்தி வரை இருந்தது. சன்னிதானத்தில் ஓட்டல்கள் மற்றும் கடைகள் இல்லாததால் பக்தர்கள் தண்ணீர் கூட வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். அன்னதானமும் பெரிய அளவில் நடைபெறவில்லை.

உயர்தப்பட்ட கட்டணங்கள் - மக்கள் தவிப்பு

மக்க‍ள் கடும் கொந்தளிப்புடன் இன்றைய தன் போக்குவரத்தை மேற்கொண்டனர். நாள் கூலிக்கு வேலை செல்பவர்கள் தங்கள் வருமானத்திற்கு இடையே இப்ப‍டி உயர்த்த‍ப்ப‍ட்ட‍ கட்ட‍ணத்தால் இனி எப்ப‍டி தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று கூறியதோடு அப்ப‍டியானால் இனி தங்களது கூலியையும் உயர்த்த‍ வேண்டும் என்று கூறினர்.
                பலரும் இன்று பேருந்து நடத்துந‌ர்களிடம் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல பேருந்துகளில் இதைக் காண முடிந்தது. சிலர் இந்த ஆட்சியை மாற்ற‍த்திற்காகத்தான் தேர்ந்தெடுத்தோம், ஆனால் இப்போது ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று தோன்றுவதாகக் கூறினர்.
                இன்று திருச்சி - திண்டுக்க‍ல் நெடுஞ்சாலையில் அங்குள்ள‍ பொதுமக்க‍ளுடன் அப்ப‍குதிகளைச் சேர்ந்த மாணாக்க‍ர்களும் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்ட‍னர். இதனால் அங்கு போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ள‍து.
                இதற்கிடையே பால் விலையும் தங்களைக் கடும் இன்னலுக்கு உள்ளாக்கியிருப்பாதகவும் மக்க‍ள் தெரிவித்துள்ள‍னர். இனி கடைகளில் தேநீர் விலையும் 7 ரூபாய் அல்ல‍து 8 ரூபாய் ஏன உயருமோ எனக் கவலையாக உள்ள‍து என்று மக்க‍ள் கூறி தங்கள் நிலையை வெளிப்ப‍டுத்தினர்.
     ஏழை, எளிய மக்க‍ளின் கட்ட‍ணங்களை உயர்த்தி அவர்களை மேலும் தாழ்த்தியுள்ள‍து அரசு.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More