3 படத்தில் கௌரவத் தோற்றத்தில் ரஜினிகாந்த்!


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 படத்தில் அவரது தந்தையும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் 3 . தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் வரும் 'ஒய் திஸ் கொலைவெறி டி' பாடல் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கேட்கிறது. யாரைப் பார்த்தாலும் ஒய் திஸ் கொலைவெறிப் பாட்டைத் தான் பாடுகிறார்கள். அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டது.

அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கூட இந்த பாட்டைக் கேட்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்நிலையில் 3 படத்தில் தனது செல்ல மகளுக்காக ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினி வேற நடித்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் தான்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More