சிரஞ்சீவி மகனை வைத்து இயக்கப் போகிறார் முருகதாஸ்!


தமிழில் சமீபத்தில்தான் முருகதாஸின் 7ஆம் அறிவு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் செய்யவுள்ளார் முருகதாஸ்.

தமிழில் மாபெரும் ஹிட் ஆன படம் விஜயகாந்த் நடித்த ரமணா. அரசியலில் நுழைய நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த்துக்கு இநத்ப் படம் பெரும் பிரேக் கொடுத்தது.

பின்னர் இந்தப் படத்தை சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் இயக்கினார் முருகதாஸ். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. சிரஞ்சீவிக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவை வைத்து இயக்கப் போகிறார் முருகதாஸ்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More