டேம் 999 உடையத் தடை ஏன் வீடியோ இணைப்பு !

'டாம் 999' டாமிட் ஆனது ஏன்..?. மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ள 'டாம் 999' திரைப்படத்தின் மூலம் தமிழர்கள் வஞ்சிகப்படுகின்றார்கள் எனச் சொல்லப்படும் கருத்துக்களை,

மிகத் தெளிவாக காட்சிப்படங்களுடன் விளக்குகின்றது இந்த ஆவணப்படம்.

தமிழகப் பொறியலாளர்களின் முயற்சியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம், முல்லைப் பெரியாறு அணை பற்றிய பொறியியல் தொடர்பான விடயங்களையும், இந்த விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக கேரள அரசு இந்த விவகாரத்தில் மேற்கொண்டுள்ள சூழ்சிகரமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகப் பேசுகிறது.

இந்த விவரணப்படத்தை முழுமையாகப் பாரத்தால், 'டாம் 999' திரைப்படத்தின் உள் நொக்கமம், அதன் பின்னணியும் தெளிவாகப் புரியும். இவ்வாறான விடயங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளாது, அது மலையாளிகளுக்கு எதிரான போராட்டம் எனக் குறுக்கிக் கொள்வது, ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் பாதகமானது.

தனுஷின் 'கொல வெறி' பாடலைக் கொல வெறியோடு ரசித்தும் பகிர்ந்தும் வரும் தமிழர்கள், இந்த ஆவணப்படத்தை பார்ப்பதும், பகிர்வதும், தமிழர்கள் மீது சிலர் கொண்டுள்ள கொலவெறியைப் புரிந்து கொள்ள உதவும் என்கிறார்கள் ஆர்வலர்கள்...சற்று நேரம் ஒதுக்கி இதனை முழுமையாகத்தான் பாருங்களேன்..


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More