கமல் ஆப்கன் தீவிரவாதியாக நடிக்கிறார்


விஸ்வரூபம் படத்தில் நடிகர் கமல்ஹாஸன் ஆப்கன் தீவிரவாதியாக நடிக்கிறார் . கமல் – பூஜா குமார் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் ஜோர்டான் நாட்டில் படமாகின்றன.

தமிழ் மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் ஆப்கனில் இயங்கி வரும் முஜாஹிதீன் தீவிரவாதியாக நடிக்கிறாராம் கமல் ஹாசன்.

இப்படத்தில் அமெரிக்காவாழ் இந்தியரான பூஜா குமார், இந்திய மாடல் அழகி இஷா ஷெர்வானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கமல் படத்தை தயாரிக்கும் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More