தமிழ்நாடு சிறப்பு தூதராக ரஜினி நியமிக்க வேண்டும்!


தமிழ்நாடு அரசின் சிறப்பு தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தரபிரதேச, குஜராத் மாநிலத்தின் சிறப்பு தூதராக அமிதாபச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் சிறப்பு தூதராக பொறுப்பு ஏற்கும்படி ஷாருக்கானை அணுகி இருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.ஆனால் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதேபோல் தமிழ்நாடு மாநில தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும். எனவே தமிழ்நாடு மாநிலத்தின் தூதராக பொறுப்பு ஏற்க ரஜினி முன்வர வேண்டும். அவரை தூதராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார். கட்சியின் மாநில செயலாளர் கண்ணன்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More