ராணாவில் இருந்து விலகுவதாக தீபிகா படுகோன் அதிரடி அறிவிப்பு!


ரஜினி நடித்த சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படம் கோச்சடையான் என்ற பெயரில் புதிய படமாக உருவாகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகளில் அனிமேஷன் சர்க்கப்பட்டு 3டிதொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படம் வரும் ஆகஸ்ட்டில் ரிலீசாகிறது.
இதற்கு பிறகு ராணா ஷூட்டிங் தொடங்குகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ராணா படம் அறிவிக்கப்பட்டது. தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனது. கடந்த ஏப்ரலில் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்ற ரஜினிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று திரும்பினார். குறைந்தபட்சம் 6 மாதமாவது ரஜினிகாந்த் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறி இருந்தனர்

ராணா சரித்திர பின்னணியுள்ள படம் என்பதால் குதிரை ஏற்றம், வாள் சண்டை உள்ளிட்ட காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டி இருந்தது. சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் அவரை ரிஸ்க்கான பணிகளில் ஈடுபடுத்த இயக்குனர் ரவிகுமார் விரும்பவில்லை. இதற்கிடையில், ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா ஏற்கனவே 3டி தொழில்நுட்பத்தில் சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படம் இயக்கி வந்தார்

பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தன. இப்படத்தின் ஸ்கிரிப்ட், இயக்கம் பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை இயக்குனர் ரவிகுமாரிடம் ஒப்படைத்திருந்தார் ரஜினி. இதற்கிடையில் ரஜினியின் உடல்நிலை கருதி ராணா ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போனதால் ஹீரோயின் தீபிகா படுகோன் அதிருப்தி அடைந்தார். நேற்று அவர் அளித்த பேட்டியில் ராணா ஷூட்டிங் பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. கால்ஷீட்டும் கேட்கவில்லை என்று கூறியதுடன் வரிசையாக இந்தி படங்களில் நடிப்பதால் ராணாவில் இருந்து விலகும் முடிவையும் அறிவித்தார். இது ராணா குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. கோச்சடையான் என்று படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகளை பதிவு செய்து பின்னர் அனிமேஷன் சேர்த்து 3டி படமாக இது உருவாகிறது.

 இந்த படத்துக்கு பிறகு ராணாவில் ரஜினி நடிப்பார் என ஈராஸ் நிறுவனமும் சவுந்தர்யாவும் தெரிவித்துள்ளனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More