சக பெண் கைதிகளுக்கு டிவி, இனிப்பு கொடுத்த கனிமொழி!


2ஜி ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்தார் திமுக எம்பி கனிமொழி. கடந்த திங்கட்கிழமை டெல்லி உயர் நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது

திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான திமுக எம்பி கனிமொழி தன்னுடன் சிறையில் இருந்த சக பெண் கைதிகளைத் தழுவி, அவர்களுக்கு சிறை கேன்டீனில் இனிப்பு வாங்கிக் கொடுத்து தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் சிறையில் பயன்படுத்திய டிவியை சக கைதிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். கனிமொழி திகாரை விட்டு வெளியே வரும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி கனிமொழி சென்னைக்கு வருகிறார். அங்கு கனிமொழி வருகையை விழாவாகக் கொண்டாட திமுக பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More