28 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!

28 அடிய உயர ஆஞ்சநேயர் சிலையுடன் உலகிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டி வருகிறார் நடிகர் அர்ஜுன்.

சென்னை அருகே கெருகம்பாக்கம் என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆஞ்சநேயர் கோயில் கட்டும் பணியை அர்ஜுன் தொடங்கியது
நினைவிருக்கலாம். 20 ஏக்கர் பரப்பளவு உள்ள அவரது சொந்த தோட்டத்தில், இந்தக் கோயிலைக் கட்டி வருகிறார்.பெங்களூர் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், 200 டன் உள்ள ஒரே கல்லில், ஆஞ்சநேயர் சிலை உருவானது. 28 அடி உயரம், 17 அடி அகலம், 9 அடி கனத்தில், ஆஞ்சநேயர் உட்கார்ந்திருப்பது போல் அந்த சிலை உருவாக்கப்பட்டது.

22 சக்கரங்களை கொண்ட ராட்சத டிரக் மூலம் ஆஞ்சநேயர் சிலை பெங்களூரில் இருந்து கெருகம்பாக்கத்துக்கு எடுத்து வரப்பட்டது.ஜனவரி முதல் வாரத்தில், அந்த சிலை பிரமாண்ட கிரேன் மூலம் சாமி பீடத்தில் அமர்த்தப்படுகிறது. இதற்கான விசேஷ பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார் அர்ஜுன்.உலகிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோயில் இதுதான்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More