ஷங்கர் இயக்க, கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்கிறார்!

டைரக்டர் லிங்குசாமி தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படம் முடிந்ததும் புதிய படத்துக்கான வேலைகளில் இறங்கப் போகிறாராம் கமல்ஹாசன்.
கமல் ஹாஸன் இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தில் பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்த தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகளை  கேட்டு வருகிறார்

கமலிடம் தற்போது இரு இயக்குனர்களின் ஸ்கிரிப்டுகள் உள்ளதாகவும், இவற்றில் எதை முதலில் அவர் ஓகே செய்வார் என இரு இயக்குனர்களும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த இருவர் இயக்குனர் ஷங்கர் மற்றும் லிங்குசாமி. லிங்குசாமியின் ஸ்கிரிப்டுக்கு கமலிடமிருந்து இதுவரை எந்த ரீயாக்ஷனும் இல்லையாம். ஆனால் ஷங்கரின் கதை பிடித்திருப்பதாக கமல் கூறியுள்ளாராம்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More