ஒஸ்தி விமர்சனம்!


கலசலா பாட்டுக்கு கைதட்டலாம்.சிம்பு ஒரு போலீஸ் அதிகாரி. கை அரிக்கும் போலீஸ். அவருடைய உடன் பிறப்பு ஜித்தன் ரமேஷ். ஒரு நாள் சிம்பு ஒரு ரவுடிக் கும்பலை வளைக்கையில் அவர்களிடம் அளவுக்கு அதிகமான திருட்டுப் பணம் சிக்க அதை தன்னுடனே வைத்துக் கொள்கிரார் சிம்பு. அரசியல் தலைவர் சோனு சூட். இந்தி படத்தில்  இவர்தான் வில்லனாம்.சிம்புவிடம் அது கட்சிப்பணம் என கதையளக்க, சிம்பு மிரளாமல் பணத்தை திருப்பித் தர மறுக்கிறார்.

சிம்பு ஒரு என் கவுண்டரில் ரிச்சாவை டாவடிக்க, ஜித்தன் சரண்யா மோகனிடம் மயங்க, ரெண்டு உடன்பிறப்புக்களும் கல்யாண ஆசையோடு பெண் கேட்க, இருவருக்குமே பிரச்சினை. ஜித்தனுக்கு பண பிரச்சினை. ஆகவே அவர் சிம்பு தடாலடியாக அடித்திருந்த பணத்தில் கை வைத்து விடுகிறார். இதற்கிடையில் மர்மமான முறையில் சிம்புவின் அம்மா கொலை செய்யப்படுகிறார். சிம்புவின் வளர்ப்பு தந்தை அவரை கழட்டி விட சிம்பு ஆனதையாகிறார்.

சிம்புவின் காதலியாகவும் பின் மனைவியாகவும் வரும் ரிச்சா கலக்குகிறார். அவர் புடவை கட்டிக் கொண்டு வந்து சிம்புவை மயக்கும் காட்சிகள் தூள்.

கடைசியில் களைமேக்சில் சிம்புவை வில்லன் சூடின் அறிவுரைப்படி கொலை செய்ததாய் ஜித்தன் சொல்ல, நம்பிய சூட், சிம்புவின் தாயை கொன்றது தான் தான் என உண்மையை போட்டு உடைக்க, ஜித்தன் சிம்புவை கொலை செய்ததாய் சொன்னது பொய் என தெரிகிறது. சிம்பு ஒரு போலீஸ் படையுடன் வந்துசசூடின் கும்பலை துவம்சம் செய்து ஜித்தனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். ரிச்சாவும் தான் உண்டாயிருப்பதாக அறிவிக்க சுபமாய் முடிகிறது படம்.

ரிச்சா, சந்தானம் படத்தின் பிளஸ் பாயிண்ட்.ஒஸ்தி வெற்றி வாகை சுடும்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More