ஜாக்கி சான், சல்மான் கான்.. கூட விஜய், அஜித், சூர்யா யார்!

கமல், விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் எடுத்து பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர் என்று பெயரெடுத்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.ஜாக்கி சான் படங்களை தமிழில் டப்பிங் செய்து தொடர்ந்து வெளியிட்டு வந்ததால் ஜாக்கிசான் இவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இவரது தயாரிப்பில் கமல் நடித்த ' தசாவதாரம் ' படத்தின் இசையை ஜாக்கிசான் வெளியிட்டார்.

ஜாக்கி சான் நடிக்கும் படம் ஒன்றிணை தயாரிக்க வேண்டும் என்பது இவரது நீண்ட கால ஆசை. அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ரவிச்சந்திரன்.ஜாக்கி சான் நடித்த ARMOUR OF GOD படத்தின் அடுத்த பாகத்தினை தயாரிக்க முடிவு செய்து இருக்கிறாராம். படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி. இப்படத்தின் கதை இந்தியாவில் நடப்பது போல அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

அந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர், இந்தி சினிமாவின் முன்னணி நாயகர்,  என படத்துக்கு பலம் சேர்க்க திட்டம் இருக்கிறதாம். இந்திய மொழிகள் பலவற்றிலும் டப்பிங் செய்து வெளியிட்டு, இந்தியாவில் கலெக்ஷனைக் கூட்ட இது உதவும்.

இதற்காக சல்மான்கானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம். ஜாக்கி சானுடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் சல்மான்கான் இதற்கு சம்மதம் தெரிவிக்க கூடும் என்கிறார்கள்.தமிழில் விஜய், அஜித், சூர்யாவை ஒப்பந்தம் செய்யலாமா என யோசித்து வருகிறார்கள்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More