விஜய் நடிக்கும் பகலவன் கேள்விக்குறி?


விஜய் 'வேலாயுதம்' படத்தினை அடுத்து .ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தினை ஜெமினி நிறுவனத்துடன் இணைந்து விஜய் அப்பா எஸ்..சந்திரசேகர் தயாரிப்பதாக இருந்தது.
 இந்நிலையில் இப்படம் ஜெமினி நிறுவனத்திடம் இருந்து கலைப்புலி தாணுவிற்கு கை மாற இருக்கிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விஜய், ஜெனிலியா நடித்த 'சச்சின்' படத்தினை தயாரித்தவர் தாணு

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நவம்பர் 26-ம் தேதி துவங்கும் என்றும், அங்கு தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.
படத்திற்கான காஜல் அகர்வால், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தினை தயாரிக்க இருந்த தாணு இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறி இருப்பது சீமான் படத்தினை கேள்விக்குறியாக்கி உள்ளது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More