திருநள்ளாறில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!


காரைக்கால் பகுதியில் உள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் ஆலயத்தின் ஸ்ரீ சனிபகவான் சன்னதியில் சனிப்பெயர்ச்சி விழா இன்று (புதன்கிழமை) காலை 7.51 மணிக்கு நடைபெறுகிறது. சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி அடைவதை ஒட்டி, இவ்விழா நடைபெறுகிறது.
ஆயுதம் ஏந்திய போலீஸôர் உள்பட ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கோயிலைச் சுற்றி 32 இடங்களிலும், குளத்தைச் சுற்றி 12 இடங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 தாற்காலிக பஸ்நிலையங்கள்: திருநள்ளாறு அருகே 3 பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மோட்டார் சைக்கிள், கார் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
 பஸ் நிலையங்களில் இருந்து கோயில் அருகே பக்தர்கள் வருவதற்கு வசதியாக ஷேர் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More